டாஸ்மாக் கடைகளில் பார்கோடு முறையில் பில்லிங்!
தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் டாஸ்மாக். டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் திடீர் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மது வழங்கிய பிறகு பில் கொடுக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.
இந்த புதிய செயல்முறை தீபாவளி பண்டிகைக்கு பிறகு நடைமுறைப்படுத்த உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார்கள் எழுவதை தடுக்கும் வண்ணம் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளன.
இதனை தடுப்பதற்காக தான் தற்போது பில் வழங்கும் நடைமறையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பார்கோடு முறையில் ஸ்கேன் செய்து பில் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட முடியாது என்பதால் மதுபானப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!