3 வது நாளாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து பெருகி காணப்படுகிறது.
இதனையடுத்து அருவிகள் நீர்நிலைகளில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட மற்றும் வன நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் கவலை தெரிவித்துள்ளனர். நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!