உஷாரா இருங்க... நூதன மோசடி... ரூ7,00,000 கட்டினா மாத சம்பளம் ரூ60000 ல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பணி !

சைபர் க்ரைம் மோசடிகள் நூதன முறையில் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கேரளாவில் வசித்து வரும் 30 வயதான பெண் வேலை பார்த்தார். ஆன்லைனில் வேறு வேலை குறித்து அந்த பெண் தேடி வந்தார். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் 1தேவைப்படுவதாகவும் மாதம் ரூ 60000 சம்பளம் வழங்கப்படும் என ஒரு செல்போன் எண் போடப்பட்டிருந்தது.
அதனை பார்த்த பெண் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறு முனையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் பேசினார். அவர் குறிப்பிட்ட அந்த பணிக்கு போட்டிகள் அதிகம். ரூ7 லட்சம் யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் என கூறினார். இதனால் அந்த பெண் சுரேஷ் கூறிய வங்கி கணக்குக்கு 6 லட்சத்தில் 12 ஆயிரத்து 540 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிறகு சுரேஷ் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!