மோன்தா புயல் ... கடற்கரைகள் மூடல்!
வங்கக்கடலில் உருவாகி தற்போது வலுவடைந்துள்ள மோன்தா புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தீவிரமடைந்ததால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும், கடல் சீற்றமும் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக, ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, நெல்லூர் உள்ளிட்ட கடற்கரைகள் பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலா மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும், வானிலை மையம் வெளியிட்ட ரெட் அலர்டின் பேரில் கடலோர மாவட்டங்களில் குடியிருப்போருக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் உயரமாக எழுவதால் மக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
