இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி கடத்தப்படுவதாக தருவைக்குளம் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாரி தேவேந்திரருக்கு கிடைத்த தகவலின் பேரில் வேம்பார் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் புதூர் பாண்டியாபுரம் லாரி டிரான்ஸ்போர்ட் குடானில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 60 கிலோ வீதம் 31 மூடைகளில் இருந்த பீடி இலை பண்டல்கள் சுமார் மொத்தம் சுமார் 30லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்த சோபன், விஜி, சரவணக்குமார், ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தருவைக்குளம் கடல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!