இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.. கையும் களவுமாக பிடித்த காவல்துறை!

 
ராபின்ஸ்டன்

தூத்துக்குடி இனிகோ நகர் ஏலக்கூடம் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், எஸ்எஸ்ஐ ராமர், ஏட்டுக்கள் இருதயராஜுகுமார், பழனி பாலமுருகன் மற்றும் பலர் நேற்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் ஏலப் பகுதி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்து வந்த இரண்டு பேர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகில் பீடி இலை மூட்டைகளை ஏற்ற முயன்றனர். போலீசார் உடனடியாக அவர்களை சுற்றி வளைத்தனர், ஆனால் அவர்களில் ஒருவர் ஓடிவிட்டார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனை சோதனை செய்தபோது, ​​அதில் தலா 30 கிலோ எடையுள்ள 29 'கட்டிங்' பீடி இலை மூட்டைகளும், 14 பீடி இலை மூட்டைகளும் என மொத்தம் 43 மூட்டை பீடி இலைகள் இருந்தன.

கைது

இதன் மொத்த எடை 1.29 டன். பீடி இலை மூட்டைகள், வேன் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த போரன்ஸ் மகன் ராபின்ஸ்டன் (25) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். தப்பியோடிய பட்டுராஜை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ. 35 லட்சம். பீடி இலை மூட்டைகள், வேன், படகு மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞரை கியூ பிரிவு போலீசார் சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web