பெங்களூருவில் கனமழை எபெக்ட்ஸ்... தேங்கிய மழை நீரில் மீன் பிடிக்கும் மக்கள் | வைரலாகும் வீடியோ!

 
பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழை  வெளுத்து வாங்கி வருகிறது. இதனையடுத்து நகரின்  பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஒக்கலிபுரம், ரிச்மண்ட் சாலை  பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.


அதன்படி பெங்களூருவில் இன்றும் (அக்டோபர் 22) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் தேங்கியதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டனர்.

தொடர் கனமழையில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு நகரின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கனமழையால் சூழ்ந்த வெள்ள நீரில் மக்கள்  மீன்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவை அடுத்த அல்லாலசந்திரா, எலவரங்கா பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரீல் மக்கள் உற்சாகமாக மீன் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web