சூப்பர்... 2024ல் சிறந்த மகளிர் டி20 கிரிக்கெட் அணி பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய வீராங்கனைகள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒரு நாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கௌரவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டின் 2024 சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐசிசி. அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
Applauding all the superstars who made the ICC Women's T20I Team of the Year for 2024 👏 pic.twitter.com/cPYHRH9cko
— ICC (@ICC) January 25, 2025
அதன்படி நட்சத்திர பேட்டர் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி 2024ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி பட்டியல் :
லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா),
ஸ்மிருதி மந்தனா (இந்தியா),
சமாரி அத்தபத்து (இலங்கை),
ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்),
நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து),
மெலி கெர் (நியூசிலாந்து),
ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா),
மரிசேன் கேப் (தென் ஆப்பிரிக்கா),
ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து),
தீப்தி சர்மா (இந்தியா),
சதியா இக்பால் (பாகிஸ்தான்)
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!