உஷார்.. இன்று முதல் திருச்சி வழியாக செல்லும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
இன்று அக்டோபர் 9ம் தேதி முதல் மதுரை கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உங்கள் பயண திட்டத்தை அதற்கேற்ப அமைத்துக் கொள்ளுங்க.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று அக்டோபர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16848) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது.

அதே போன்று நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (எண்16352) வருகிற 12-ந்தேதி மற்றும் 16-ந்தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது.
மேலும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்:12666) வருகிற 11-ந்தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
மேலும் குருவாயூரில் இருந்து அக்டோபர் 12ம் தேதி வரை இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.

அதுபோல் வருகிற 10ம் தேதி காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07229) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
மேலும் இன்று 9ம் தேதி மற்றும் 16ம் தேதி மதுரையில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை- பிகானீர் அனுவ்ராத் அதிவிரைவு ரெயில் (எண்:22631) 25 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.30 மணிக்கு புறப்படும்.
இது போல் திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (எண்:16849) அக்.10ம் தேதி வரையும், 13ம் தேதியும் மானாமதுரை-ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று ராமேசுவரம் செல்லாது. அதே நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படவேண்டிய திருச்சி எக்ஸ்பிரஸ் மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
