உஷார்... லீவு முடிந்து காரில் சென்னைக்கு திரும்பறீங்களா...? ஜிஎஸ்டி, ஓஎம்ஆர், ஈசிஆரில் எச்சரிக்கை... பாதுகாப்பா வாங்க!
தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு தொடர் விடுமுறை தினங்கள் முடிந்த நிலையில் நாளை பணியில் சேர இன்று மாலை முதல் சென்னைக்கு திரும்பும் பயணிகள் கனமழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என வானிலை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நகரின் தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு தெற்கே உள்ள ஜிஎஸ்டி சாலை, கோவளம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வழித்தடங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. மேலும் ஓஎம்ஆர் வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கி நகரும் மழைப்பகுதிகள் வேகமாக பரவக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

சென்னையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் உருவாகியுள்ள மழை மேகங்கள் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரைக்கும் பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.
இதனால் சொந்த ஊர்களில் இருந்து இன்று மாலை மற்றும் நாளை அதிகாலை சென்னைக்கு திரும்புவோர், குறிப்பாக ஜிஎஸ்டி, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் வழியாக கார்களில் பயணிப்பவர்கள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை தீவிரமடையும் நிலையில், மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
