உஷார்... முன்னதாகவே வலுப்பெற்று புயலாக உருவாகும் ‘மோன்தா’... வடதமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

 
தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலுப்பெற்று, எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்கூட்டியே இன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 790 கி.மீ., ஆந்திரப் பிரதேசத்திற்கு தென்கிழக்கில் 850 கி.மீ. தொலைவில் மையமிட்டிருந்த இந்த மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தாய்லாந்து நாடு பரிந்துரைத்த ‘மோந்தா’ என்ற பெயர் இப்புயலுக்கு சூட்டப்பட உள்ளது.

புயல்

இதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாளில் வடதமிழக மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், இன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை ஏற்படலாம் எனவும், புதுச்சேரி, காரைக்கால், சில வடமாவட்டங்களிலும் மிதமான மழை தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் புயலாக உருவாகும் ‘மோந்தா’, 28ஆம் தேதி (நாளை மறுநாள்) மாலை அல்லது இரவில் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். அந்நேரத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

’கொமெ’ புயல்

புயல் நகர்வை முன்னிட்டு, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள் அனைத்தும் அதிக எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?