உஷார்... இரவில் தூக்கமின்மை... இந்த நோய்களுக்கெல்லாம் எச்சரிக்கை மணி!
அவசரமாக ஓடும் வாழ்க்கையில் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயங்களில் ஒன்று தூக்கம். ஆனால், நம் முழுமையான உடல் ஆரோக்கியத்துக்கு மிக அத்தியாவசியமானதே இந்த தூக்கம்தான். சரியான நேரத்தில், போதுமான அளவு தூங்கவில்லை என்றால், அது உடலையும் மனதையும் மெல்ல மெல்ல பாதிக்கத் தொடங்கும். படபடப்பு, டென்ஷன், கவனம் சிதறல், பகல் நேர தூக்கம், சோர்வு, பசியின்மை, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் பலருக்கும் இருப்பதை நாம் சாதாரணமாக எண்ணிவிடுகிறோம். உண்மையில் இவை தூக்கமின்மை தரும் ஆரம்ப எச்சரிக்கைகள்.

இந்த தூக்கமின்மை நீண்ட காலம் தொடரும்போது ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் வருவதற்கான வாய்ப்பை தூக்கமின்மை உயர்த்துகிறது. இரவில் சரியாக தூங்காதவர்களுக்கு பித்தநீர் சுரப்பு சீர்குலைந்து, அஜீரணம், அல்சர், பித்தப்பைக் கற்கள் போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனுடன் நாள்பட்ட மலச்சிக்கல் தொடர்ந்தால், குடல் கசிவு போன்ற நிலைகள் உருவாகி, தன்னியக்க நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகரிக்கிறது.

ஆகவே, தூக்கத்தை அலட்சியம் செய்வது நம் உடலுக்கு நாமே செய்து கொள்ளும் பெரிய தீங்கு. நல்ல இரவுத் தூக்கம் என்பது, உடல் தன்னைத் தானே உள்வாங்கி சீரமைத்துக் கொள்ளும் இயற்கையின் அற்புதமான செயல்முறை. ஆரோக்கியமாக வாழவும், நீண்ட ஆயுளைப் பெறவும் தினமும் தரமான தூக்கத்திற்கு அவசியம் இடம்கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். தூக்கம் சரியானால், உடலும் மனமும் தானாக சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
