உஷார்... பாதுகாப்பா இருங்க... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
காவிரி நீர்ப்பிடிப்பு கனமழை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் செண்பகத்தோப்பு அணைக்கு அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அணைக்கு 900 கனஅடி நீர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகளவிலான நீர்வரத்து காரணமாக அணை அருகாமையில் வசிக்கும் கரையோற மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னை

அதே நேரம் அரக்கோணம் மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் வினாடிக்கு 6480 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பொன்னை

அதன்படி மாதாண்டகுப்பம், கீரைசாத்து, வெப்பாலை, குகையநல்லூர், திருவலம், வசூர், கொண்டாக்குப்பம், ஏகாம்பரநல்லூர்   பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் பொன்னை ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?