உஷார்... லிப்ட் கேட்ட இளம்பெண்... சபலப்பட்டு முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!
கடலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவரை ஏமாற்றி நகை பறித்த இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் கடந்த 16-ம் தேதி மோட்டார் சைக்கிளில் செந்துரை பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் ஒரு இளம்பெண் லிப்ட் கேட்ட நிலையில், ஆசைவார்த்தை பேசி வலைவீசி, தன்னை திட்டக்குடி அருகிலுள்ளவர் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தன்னை வீடு செல்லும் வரை வழியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய முதியவர், சபலத்துடன் இளம்பெண்ணை அவரை மோட்டார் சைக்கிளில் கூட்டிச் சென்றபோது, வழியிலுள்ள காட்டுப் பகுதியில் அவரை நிறுத்தி பேச்சில் ஈர்த்துள்ளார். இருவரும் காட்டுப்பகுதியில் ஒதுங்கி, மது அருந்தி உள்ளனர். பின்னர் உல்லாசத்திற்கு முதியவர் தயாரான நிலையில் அங்கு வந்த மற்றொருவர், முதியவரை தாக்கி அவர் அணிந்திருந்த 6.5 சவரன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட முதியவர் அளித்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அரியலூர் மாவட்டம் சிலம்பூர் பகுதியைச் சேர்ந்த கலையரசி (35) மற்றும் அவரது நண்பர் மேல்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் (30) ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் கலையரசி திருச்சி மகளிர் சிறையிலும், நவீன்குமார் அரியலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
