பிக்பாசில் களம் இறக்கப்படும் 5 புதிய வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் யார், யார்?

 
பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?


தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி  மூன்று வாரங்களை கடந்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில்   தயாரிப்பாளர் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.4வது வாரத்தில் 15 பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ஆண்கள், பெண்கள் என்ற வகையில் இரு வீடாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 8

ஆனால், கடந்த சீசன்களை போன்று சுவாரஸ்யம் இல்லை என்கின்றனர் பார்வையாளர்கள், ரசிகர்கள்.  நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியும் போட்டியாளர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.சக போட்டியாளர்கள் மீதான கருத்துகளை அனைவரும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என விஜய் சேதுபதி  தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பிக் பாஸில் மேலும் சுவாரஸ்யத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.  

பிக்பாஸ் 8

போட்டியாளர்களுக்கு கொடுக்கும் சமையல் பொருள்கள் வாங்குவதற்கான டாஸ்ல், கேப்டன்சி டாஸ்க், வீட்டு வேலைக்கான டாஸ்க், நாமினேஷன் டாஸ்க் இவைகளை மேலும் கடினமாக்கவும், அதன் மூலம்  சுவாரஸ்யத்தை கொண்டு வரவு திட்டமிடப்பட்டுள்ளது.அதே போல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறுதியை உடைக்கும் விதமாக, வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களை இந்த வாரம் களம் இறக்கப்படுகிறார்கள் .  அந்த வகையில் அர்ணவ்வின் முன்னாள் மனைவி திவ்யா, குக் வித் கோமாளி ஷாலின் சோயா, விஜய் டி டி.எஸ்.கே, பாடகி ஸ்வாகதா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

From around the web