பிக்பாஸ் 8 : காதல் கதையை சொல்லி கதறித் துடித்த அன்ஷிதா!

 
அன்ஷிதா

 விஜய் டிவியில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று செல்லம்மா. இந்த சீரியல் மூலம்  தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை அன்ஷிதா. அவருடைய ஜோடியாக நடித்த அர்னவுடன் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.   அன்ஷிதா மற்றும் அர்னவ் மீது அவருடைய முன்னாள் மனைவி திவ்யா ஓபனாக குற்றச்சாட்டை முன் வைத்தார். இருவருக்கும் தகாத பழக்கம் இருப்பதாக அவர் புகார் தெரிவித்ததில் பெரும் சர்ச்சையாக மாறியது.

அன்ஷிதா

இந்த பிரச்னை நடந்த சமயத்தில் அன்ஷிதா அர்னவிடம் ஐ லவ் யூடா அர்னவ் என்பதும், திவ்யாவை வெட்டி நாயிற்கு போட்டு விடுவேன் எனக் கூறியதும் மோசமாக ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.  இந்நிலையில் இருவரும் ஜோடியாக பிக்பாஸ் தமிழுக்குள் வந்தனர்.
அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்தாலும் அன்ஷிதாவுடன் பேசியதே சில நிமிடங்களாக இருந்தது. அவர் வெளியேறிய போது அன்ஷிதா அழுதார். இருந்தும் தன்னை தேற்றிக்கொண்டு தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று தன்னுடைய முத்து, பவித்ரா உட்பட  சக போட்டியாளர்களிடம் காதல் வாழ்க்கை குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.  அப்போது எனக்கும், அவனுக்கும் 3 வருடமாக காதல் இருந்தது.

பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?

முதலில் நல்லாத்தான் போயிட்டிருந்தது.  பொசசிஸ்வாக நடந்து கொள்வான். நான் கியூட்டாக சுற்றிச்சுற்றி வந்தேன். என் பக்கம் தான் தவறு இருக்கிறது. 3 மாதத்துக்கு முன்னர் நான் வேறு ஒரு இந்தி பெண்ணை காதலிப்பதாக சொன்னான். பேய் அறைந்தது போல் ஆகிவிட்டேன். முழுதாக அவன் மீது மட்டும் தப்பு சொல்ல  முடியாது.  நான் எதுவோ சரியாக காட்டவில்லை என நினைத்தேன். என்னுடைய தோழியிடம் அழுது ஒப்பாரி வைத்தேன். இங்கு வந்த அன்று கூட மருத்துவரிடம் பேசி கலந்து ஆலோசித்துவிட்டு தான் வந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அன்ஷிதா தன்னுடைய காதலர் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web