இனி ரேஷன் கடையிலேயே தக்காளி, காய்கறிகள்!! விலைப் பட்டியல் வெளியீடு!!

இனி ரேஷன் கடையிலேயே தக்காளி, காய்கறிகள்!! விலைப் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. விளைநிலங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக தக்காளி விலை ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இனி ரேஷன் கடையிலேயே தக்காளி, காய்கறிகள்!! விலைப் பட்டியல் வெளியீடு!!

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ 85 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனி ரேஷன் கடையிலேயே தக்காளி, காய்கறிகள்!! விலைப் பட்டியல் வெளியீடு!!

இதனை எளிமைப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகள் மூலமும்ல் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுவ் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முதல் கட்டமாக நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்கப்படும். தக்காளி கிலோ ரூ 79, முருங்கைக்காய் ரூ 110, வெண்டைக்காய் 70 ரூபாய், உருளை ரூ 38 , கத்தரிக்காய் ரூ 65 க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web