பிக்பாஸ் தொகுப்பாளருக்கு கொலை மிரட்டல்... பவுன்சர்களுடன் நிகழ்ச்சிக்கு சென்ற சல்மான்கான்!

 
சல்மான் கான்
நடிகரும் பிக்பாஸ் தொகுப்பாளருமான சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பவுன்சர்களுடன் சென்றிருந்தார்.

மான் வேட்டை விவகாரத்தில் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததும் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் இல்லத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாது, சல்மான் கானை கொல்வதற்கு ரூ. 25 லட்சம் பேரம் பேசியதாகவும் செய்தி வெளியானது. மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸப் எண்ணிற்கு சல்மான் கானை கொல்ல ரூ. 5 கோடி தர வேண்டும் எனவும் சல்மானுக்கு முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பாபா சித்திக்கை விடவும் மோசமாகக் கொல்லப்படுவார் எனவும் அந்த மிரட்டல் கும்பல் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சல்மான் கான்

இதனால், சல்மான் கான் இல்லத்துக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றிருக்கிறார் சல்மான் கான். அவருக்கு கிட்டத்தட்ட 60 பாடிகார்டுகள் பாதுகாப்பிற்காக உடன் சென்றிருந்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web