லாரி மீது பைக் மோதி விபத்து... 10ம் வகுப்பு மாணவர் மரணம்!
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே பைக் - லாரி மோதிய விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் படுகாயம் அடைந்தான்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள தெற்கு நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் மகன் சக்திராஜா (14), அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். சுப்பிரமணியன் மகன் அஸ்வின் (13) அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நண்பர்களான இருவரும் இன்று உறவினர் ஒருவரின் மோட்டார் பைக்கில் குரும்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இவ்விபத்தில் 2 சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் அஸ்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயம் அடைந்த சக்திராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா