இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் !!

 
இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் !!

தமிழகத்தில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் துறை வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் மக்களை கவரும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்கள் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் !!


இந் நிலையில், நீட் தேர்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதன்படி அந்த குழு ஜூலை மாதம் 17ம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.


மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்த கூட்ட தொடரில் இறுதி நாளான இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் !!

இன்றைய தினமே இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதிமுக ஆட்சியில் ஏற்கனவே இரண்டு மசோதாக்கள் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு பின்னர் மத்திய அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

From around the web