போலீசுக்கு செக்... தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு!

 
பயோமெட்ரிக்

 தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் , கல்லூரிகள் என பல இடங்களில் பயோமெட்ரிக் வருகைபதிவு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை மேலும் பரவலாக்கும் வகையில் தமிழகத்தில்  உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பயோமெட்ரிக்

அதன்படி இந்த திட்டம் விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் அமலுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  அதாவது காவல் நிலையங்களில் போலீசார் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  

பயோமெட்ரிக்
இதன் காரணமாகத்தான் தற்போது தமிழக அரசு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு  காவலர்கள் காலை 7 மணிக்கே பணிக்கு வரவேண்டும். அவர்கள் காலை 7 மணிக்கு வந்து விரல் ரேகை மூலமாக அட்டனன்ட்ஸ் வைக்க வேண்டும். அதே நேரத்தில்   பணிக்கு தாமதமாக வருபவர்கள் மீது தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web