போதையை கண்டித்ததால் விபரீதம்... பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!

கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார். ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் அவருக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி சுபைதாவிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த ஆஷிக் சொந்தமாக எலட்ரிக் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் ஆஷிக்கின் போதை பழக்கம் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்த ஆஷிக்கையும் சுபைதாவையும் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதன் பிறகு ஆஷிக் முழுநேர போதைப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார். அதனால், சுபைதா அவரை போதை தடுப்பு மையத்தில் இருமுறை சேர்த்தும் இருக்கிறார். ஆனால் ஒவ்வொருமுறையும் போதை தடுப்பு மையத்திலிருந்து வெளியே வந்த ஆஷிக் மீண்டும் போதை குழுவினருடன் இணைந்து போதைக்கு அடிமையாகி இருக்கிறார். அவரால் போதையை விடமுடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆஷிக் அவர் மீதே வெறுப்புக்கொள்ள ஆரம்பித்தார். தான் இந்த உலகத்தில் பிறந்ததற்கு காரணம் சுபைதா, என நினைத்த ஆஷிக் தாயின் மீது வெறுப்புற்று அவரை இருமுறை கொலை செய்யவும் முயற்சித்தார். இந்நிலையில் சுபைதாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே அவர் தனது சகோதரியான ஷகிலா வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்தார்.
இச்சம்பவம் நடந்த நாளில் ஆஷிக் போதையில் தன் தாயை கொலைசெய்ய நினைத்து பக்கத்து வீட்டில் தேங்காய் உரிக்க கத்தி வேண்டும் என கேட்டு வாங்கிக்கொண்டு, தனது சித்திவீட்டில் தங்கியிருந்த தாயை சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சுபைதா உயிரிழந்தார். சாவகாசமாய், ரத்தம் தோய்ந்த கத்தியையும் கைகளையும் வீட்டின் முற்றத்தில் உள்ள குழாயில் கழுவுகையில், அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் தப்பி ஓடப்பார்த்த ஆஷிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!