2500 அரிசி, 200 ஆடு... மதுரை முனியாண்டி கோவிலில் பிரியாணி தான் பிரசாதம்... பாத்திரங்களில் அள்ளிச் சென்ற கிராம மக்கள்!

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி திருக்கோயில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் சனிக்கிழமையில் 'சமத்துவ விருந்து' நடைபெறும். இதில் ஆடு கோழிகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் பக்தர்களின் நேர்த்திக்கடனாக 200 ஆடுகளையும், கோழிகளையும் மற்றும் சுமார் 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைத்தனர். இதில் 20,000 மேற்பட்ட கிராம மக்களுக்கு அன்னதானத்தில் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து இதற்காக எடுத்து வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த திருவிழாவில் வேண்டிக்கொண்டால் அந்த வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!