தங்கத்தை ஓவர் டேக் செய்யும் பிட்காயின்... எதில் முதலீடு அதிக லாபம்?

 
பிட்காயின்
 

சமீபகாலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து வருகிறது. சர்வதேச சூழல், அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சுழற்சி இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. இதே நேரத்தில் பிட்காயின் விலையும் புதிய உச்சத்தை எட்டி, தங்கத்தை ஓவர்டேக் செய்யும் நிலைக்கு வந்துள்ளது. கடந்த வாரங்களில் பிட்காயின் ஒரு கோடியை தாண்டி வர்த்தகத்தில் அதின் மதிப்பு அதிகரித்து வருகிறது. உலகின் பிரபல கிரிப்டோ நாணயமான பிட்காயின் அமெரிக்காவில் ரூ.1,25,617 டாலர் என்ற புதிய உச்சத்திற்கு எட்டியுள்ளது.

பிட்காயின்

இந்த நிலையில் இந்திய மதிப்பாக பிட்காயின் சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாயாகும். இதனால், ஒரு பிட்காயின் விலை ஒரு கோடியை தாண்டி வர்த்தகத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆர்வத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் கிரிப்டோ சந்தையில் பிட்காயின் விலை அதிகரித்தும் குறைந்தும் வந்திருந்தாலும், தற்போது அதன் மதிப்பு மின்னல் வேகத்தில் உயர தொடங்கியுள்ளது. பெரிய அளவிலான நீதி நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும் பிட்காயினில் அதிகளவில் முதலீடு செய்ய தொடங்கி இருப்பதும் இதன் மதிப்பை அதிகரிக்கும் முக்கிய காரணமாகும்.

பிட்காயின்

பிட்காயின் விலை உயர்வுடன், சந்தையில் உள்ள பிற முக்கிய கிரிப்டோ நாணயங்களான இத்தீரியம் மற்றும் சுலானாவும் இரட்டை இலக்க வளர்ச்சியை காண்கின்றன. அக்டோபர் 15ஆம் தேதி, பிட்காயின் மதிப்பு இந்தியாவில் ரூ.99,31,112 ஆக நிலைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிட்காயின் மதிப்பு 984 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தங்கத்தின் மதிப்பு 37 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், கிரிப்டோ முதலீடுகள் கடந்த காலத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்கியதாகத் தெரிகிறது, ஆனால் அதன் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டால் அது மிகவும் அத்தியாவசிய கவனத்துடன் கண்காணிக்க வேண்டிய முதலீடு என்பது தெளிவாகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?