கஞ்சா வழக்கில் பாஜக நிர்வாகி மகன் கைது!
சென்னையில் கஞ்சா மற்றும் கொக்கைன் வைத்திருந்த வழக்கில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமான் (21) கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் போலீசார் பாடி குப்பம் சாலையில் ரோந்து பணியில் இருந்தபோது, கார் ஒன்றின் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த மூவரை விசாரித்தனர். அதில் ஒருவர் தப்பிச் சென்றார்.

மற்ற இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ரசீத் (25) என தெரியவந்தது.
காரை சோதனை செய்தபோது, 7 கிராம் கொக்கைன், 20 கிராம் கஞ்சா, கூலிப் பாக்கெட்டுகள், 4 செல்போன்கள், கஞ்சா அரவை இயந்திரம், எடைக்கருவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான கூட்டாளியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
