இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி கைது!

தென்காசியில் இளம்பெண் ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது, தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்த பாஜ பிரமுகரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியரை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், பாஜ பட்டியல் அணி முன்னாள் மாவட்ட தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போது பாஜ செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் புளியரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது அதனை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயத்தில் கூச்சலிட்டு அலறியடித்து கத்தியுள்ளார்.
இளம்பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து குமார் தப்பியோடினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புளியரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் புளியரைப் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!