பாஜக எம்.எல்.ஏ. காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
கர்ஷன்பாய் சோலன்கீ


 
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்  காடி சட்டமன்ற உறுப்பினர்  கர்ஷன்பாய் சோலன்கீ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அஹமதாபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு வயது 68. அவரது இறுதி சடங்கு காடி தாலுக்காவிலுள்ள அவரது சொந்த ஊரான நாகராஸன் கிராமத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

கர்ஷன்பாய் சோலன்கீ
இதனைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கு குஜராத் முதல்வர்  பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் உட்பட  மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, கர்ஷன்பாய் சோலன்கீ காடி சட்டமன்ற தொகுதியில் 2017 மற்றும் 2022 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web