பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு... 3 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில் 3 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்வடமேற்கு பாகிஸ்தானின் பதற்றமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் இருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள தரபன் பகுதியில் போலியோ பணிக்காகச் சென்ற பாதுகாப்புப் படையினரின் வாகனம், சாலையோர வெடிகுண்டு மூலம் வெடித்துச் சிதறிய சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒரு வார கால போலியோ ஒழிப்பு பிரச்சாரத்தை நாடு தொடங்கிய நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ தொழிலாளி மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தனித்தனி சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய போலியோ எதிர்ப்பு இயக்கத்தின் முதல் நாளிலேயே அடையாளம் தெரியாத ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, பன்னு மாவட்டத்தில் போலியோ ஊழியரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!