இரும்பு தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்கள்.. தீ விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் படுகாயம்!
திருப்பதி அருகே இரும்பு தொழிற்சாலையில் கொதிகலன்கள் வெடித்து சிதறியதில் 7 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பென்னேபள்ளியில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று இரவு ஷிப்டில் சுமார் 70 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் தொழிற்சாலையில் இருந்த 2 கொதிகலன்கள் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைப் பார்த்த மற்ற தொழிலாளர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!