பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!
பாலிவுட் துறையின் மூத்த நடிகரான தர்மேந்திரா (90) நேற்று (அக்டோபர் 31) திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது காரணமான வழக்கமான பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாவது, “தர்மேந்திரா நலமாகவே உள்ளார். எவ்வித உடல்நலப் பிரச்னையும் இல்லை. வழக்கமான சுகாதார பரிசோதனைக்காகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்,” என்றனர்.

‘ஷோலே’, ‘சத்கர்’, ‘யாதோன் கி பாராத்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த தர்மேந்திரா, கடந்த சில ஆண்டுகளாக திரை உலகில் குறைவாகவே தோன்றிவருகிறார். தற்போது அவர் நிலை நலமாக இருப்பதாக குடும்பம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
