பாலிவுட் நகைச்சுவை நடிகர் அஸ்ராணி காலமானார்!

 
அஸ்ரணி

பாலிவுட் திரையுலகில் நகைச்சுவை துறையில் நீங்கா இடம் பிடித்த மூத்த நடிகர் கோவர்தன் அஸ்ராணி, உடல்நலக்குறைவு காரணமாக 84 வயதில் இறந்தார். 1975ல் வெளியான ‘சோலே’ திரைப்படத்தில் அவர் நடித்த ‘ஆங்கிலேயர் காலத்து ஜெயிலர்’ கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் சிறப்பாக நிலைத்திருக்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பயணத்தில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிப் படங்களில் ரசிகர்களின் மனதில் ஒரே இடத்தைப் பெற்ற இவர், சமீபத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினையால் ஜுஹுவில் உள்ள பாரதிய ஆரோக்ய நிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை சிகிச்சை பலனின்றி, நேற்று அவரது உயிர் பிரிந்தது.

அஸ்ராணி இறப்புக்கு முன்பும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அவரது இறுதி விருப்பப்படி, இறுதிச் சடங்குகள் மும்பை சாந்தாகுரூஸ் மின்மயானத்தில், குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்று, அவரின் தனித்துவமான வாழ்கை மற்றும் திரைபயணத்தை நினைவுகூர்ந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!