லாரி ஓட்டுநர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!
திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9வது கிராஸை சேர்ந்தவர் சோலை பாண்டியன் (60). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகன் கார் மெக்கானிக் சுரேஷ்குமார். இவர்கள் 3 பேரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு தூங்க சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் கார் மெக்கானிக் சுரேஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்த போது படுக்கையறையில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.
அதிர்ச்சியடைந்து எழுந்து பார்த்தபோது, அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பயந்து போனார். பின்னர் பார்த்தபோது ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் உடனடியாக நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசீலன், எஸ்ஐ தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட மோதலில் சோலை பாண்டியனின் மனைவி மல்லிகாவின் சகோதரர் கோபால் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீசப்பட்ட வெடிகுண்டு நாட்டு வெடிகுண்டு அல்ல என்றும் வெங்காய வெடி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!