நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் பரபரப்பு!
திரை பிரபலங்களை குறிவைத்து வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் மேலும் ஒன்று சம்பவித்துள்ளது. இம்முறை நடிகர் அருண் விஜய் வீட்டை குறிவைத்து மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் என பல்வேறு இடங்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை டி.ஜி.பி அலுவலகத்திற்கு அனானிமஸ் மெயில் வந்தது. அதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர் படை, மோப்ப நாய்கள், போலீசார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்து சென்று முழுமையான சோதனை மேற்கொண்டனர். வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிர சோதனை நடைபெற்றபோதும் எந்தவித வெடிபொருட்களும் மீட்கப்படவில்லை. இதனால் இது குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுக்கப்பட்ட பொய்மிரட்டல் எனத் தெரியவந்தது.
மின்னஞ்சலை அனுப்பிய நபரை கண்டறிய சைபர் பிரிவு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களால் தொடர்ந்து இப்படியான மிரட்டல்கள் விடப்படுவது குறித்து போலீசார் கண்காணிப்பை மேலும் கடுமையாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை இணையதளத்தில் அச்சுறுத்தல் செய்திகளை துஷ்பிரயோகம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமென சமூகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
