உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... ராஜஸ்தானில் பரபரப்பு!

 
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஐகோர்ட்டுக்கு இன்று (டிசம்பர் 9) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரிய வந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நீதிமன்றப் பதிவாளருக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் எங்கும் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானதால், இந்த மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!