கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
கூடங்குளம் அணுமின் நிலையம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் மேற்கொண்ட தீவிரச் சோதனைக்குப் பிறகு, இந்த மிரட்டல் போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

தற்போது தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் ரஷ்யாவின் பங்களிப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அணுமின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து அணுமின் நிலையத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

கூடங்குளம் அணுஉலை

இதையடுத்து, போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக விரைந்து வந்து அணுமின் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த மிரட்டலை விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தற்போதுத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!