ஊருக்குள்ள நுழைஞ்சாலே... எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்... அதிர வைத்த இளைஞர்!

 
வெள்ளத்துரை

தமிழகத்தில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை  அவசர உதவி எண் 100க்கு ஒரு  மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பில் செப்டம்பர் 1ம் தேதி விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் ஜெயந்தி விழாவையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் எனக் கூறினார்.

மக்கள் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்வது, காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் கடமை.- எடப்பாடி பழனிச்சாமி

 மேலும் புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும்  அந்த அழைப்பில் கூறப்பட்டது.  இந்த அழைப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அந்த நபரின் செல்போன் சிக்னல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியிலிருந்து அழைக்கப்பட்டதாகக்  காட்டியது. விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் புளியங்குடி  தலைவன்கோட்டை மெயின் ரோட்டில் வசித்து வரும் 32 வயது பூசைபாண்டியன் மகன் வெள்ளத்துரை  என்பது தெரிய வந்தது.

உத்தரபிரதேச போலீஸ்

 அவரிடம் விசாரணை நடத்திய போது, கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில்  செயல்பட்டதாக வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web