3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பெரும் பரபரப்பு!
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சமூக ஊடகங்கள் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, சென்னையை அடுத்த செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு, திருமழிசை பகுதிகளில் உள்ள மூன்று பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதைத் தொடர்ந்து, ஆவடி காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் முடிவில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், மிரட்டல் மின்னஞ்சல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை கண்டறிய தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
