நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் அடுத்தடுத்து பரபரப்பு!
போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் இந்து ராம் ஆகியோரது வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று விரிவான சோதனையில் ஈடுபட்டனர்.

போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகள் சுற்றிலும் போலீசார் நாய்படை மற்றும் குண்டு நீக்கப் படையினருடன் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால், எந்தவிதமான வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் மூலம் மிரட்டல் வெறும் பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது.
இதேபோல், சென்னை கீழ்பாக்கம் சுப்பிரமணியன் தெருவில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை வீட்டுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலை யார் அனுப்பியுள்ளனர், எந்த நோக்கத்துடன் அனுப்பியுள்ளனர் என்பதற்காக போலீசார் தொழில்நுட்ப வழிகளிலும், சைபர் குற்றப்பிரிவினரின் உதவியுடனும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலங்களில் பிரபலங்களுக்கு எதிராக மிரட்டல் மின்னஞ்சல்கள் அதிகரித்துள்ள நிலையில், இச்சம்பவம் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
