அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய்... கோவையில் பூத் ஏஜெண்ட் மாநாடு!

தமிழகத்தில் நடிகர் விஜய் தவெக அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், பிரம்மாண்டமாக முதல் மாநாட்டை நடத்தி காட்டியுள்ளார். சென்னை அருகே முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, பூத் ஏஜென்ட்கள் மாநாட்டை கோவையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார் .
தமிழ்நாடு முழுவதும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 60000 பூத்துக்களில் ஏஜென்ட்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநாட்டை மண்டல வாரியாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக கோவையில் பூத் ஏஜென்ட் மாநாடு நடைபெற இருப்பதாகவும், இதற்காக அங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பூத் ஏஜென்ட் மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த மாநாட்டில் ஒவ்வொரு பூத்து ஏஜெண்டும் செயல்பட வேண்டியது எப்படி என்பது குறித்து விஜய் அறிவுரை வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!