#boycott saipallavi | ரிலீஸ் நேரத்தில் சிக்கலில் சிக்கிய அமரன் திரைப்படம்!

 
அமரன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்  அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.  இப்படத்தின் ப்ரோமோசனை தொடங்குவதற்கு முன்னர் சாய்பல்லவி தேசிய போர் நினைவகம் சென்றார். அது குறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், நான் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோசனை துவங்குவதற்கு முன்னர் நமக்காக உயிர்விட்ட ஆயிரம் தியாகிகள் வாழும் கோவிலுக்கு சென்றேன்.  மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம் சிங் இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் போது உணர்ச்சி வயப்பட்டேன்.  

சாய் பல்லவியின் இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் எக்ஸ் வலைதளத்தில் #boycottsaipallav என்ற ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது. இது குறித்து ஆராயும்போது நடிகை சாய்பல்லவி தன்னுடைய வீராத பருவம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில்  பாகிஸ்தான் மக்கள் நம்முடைய ஆர்மி அதிகாரிகளை தீவிரவாத குழுவாக தான் பார்ப்பார்கள்.

அமரன்

ஆனால் நமக்கு அந்த நாட்டு ஆர்மி அது போன்று தோன்றும்.  ஒவ்வொருடைய கண்ணோட்டமும் மாறுபடும். இதற்கு வன்முறை ஏன் என்று தான் புரியவில்லை. 2 வருடங்களுக்கு முன்னர் சாய் பல்லவி பேசிய இந்த வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது. சொந்த நாட்டின் ஆர்மி வீரர்களை கொச்சைப்படுத்தி விட்டு பெருமையாக பேசுவது போல் சாய் பல்லவி நடிப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  சாய் பல்லவியின்  பதிவுகளில் நெட்டிசன்கள் தங்களுடைய குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர்.  

அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் மூன்றே தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென சாய்பல்லவிக்கு எதிராக இந்த நெகட்டிவ் இமேஜ் காரணமாக படத்திற்குவந்துவிடுமா என படக்குழு தயாரிப்பு நிர்வாகம் கவலைப்படுகிறது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web