திருமணத்துக்கு மறுத்த காதலன்... தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து கல்லூரி மாணவி தற்கொலை!
காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால், 19 வயது நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர், தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாலாங்காடு லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் டிப்ளமா பயிற்சி படித்து வந்தார்.
இந்நிலையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்பவருடன் கடந்த ஒன்றரை வருடங்களாக ஹரிதா, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று சுற்றிவந்து தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக தன்னை திருமணம் செய்யுமாறு ஹரிதா திலீப்பை வற்புறுத்தி வந்ததாகவும், திலீப் திருமணம் செய்துக் கொள்வதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிதா, வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக ஹரிதா, தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தில் “என் மரணத்திற்கு திலீப் தான் காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஹரிதாவின் பெற்றோர் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிந்தும், உறவினர்கள் உடலை பெற மறுத்து, “திலீப்பை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம்” என மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் டி.எஸ்.பி கந்தன் தலைமையில் போலீசார் சமரசம் பேசினர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
