பிரம்மோஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

 
ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி

பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவில் உள்ள மாஸ்க்வா நதியின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என்ற பெயர் உருவானது. நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 2.8 மாக் (ஒலியை விட 3 மடங்கு) வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் 290 கி.மீ.

பிரம்மோஸ் இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு உபகரணமாக உருவெடுத்துள்ளது. தென் சீனக் கடலில் சீனக் கடற்படை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எதிரியின் போர்க்கப்பல்களைத் தாக்கும் வகையில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்துள்ளது. இந்தியாவிடமிருந்து 3 யூனிட் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை 375 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ஜனவரி 2022 இல் கையெழுத்தானது.

அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதி ஏப்ரல் 20ஆம் தேதி பிலிப்பைன்ஸுக்கு அனுப்பப்பட்டது.இந்திய விமானப்படையின் ஜம்போ விமானமான சி-17 குளோப்மாஸ்டர் மூலம் பிரமோஸ் ஏவுகணைகள் பிலிப்பைன்ஸை அடைந்தன. பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் ஏற்றுமதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அதுல் தினகரன் ரானேவின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைகிறது. 2021ம் ஆண்டு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவராக அதுல் தினகரன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், புதிய தலைவராக பிரபல ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 1ம் தேதி பொறுப்பேற்பார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web