பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை... இன்று இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு!

 
பிரேசில்

பிரேசில் துணை ஜனாதிபதி ஜெரால்டோ ஆல்க்மின், மனைவி மரியா லூசியா ஆல்க்மினுடன், இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கு 3 நாள் அரசு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார். டெல்லியில் விமானப்படை சார்பில் சிறப்பு வரவேற்பு பெற்ற இவருக்கு நேற்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் வரவேற்பு செய்தனர்.

பிரேசில் துணை ஜனாதிபதி

இன்று பிரேசில் துணை ஜனாதிபதி இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளார். இதனையடுத்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மந்திரி ஹர்தீப் சிங் புரி ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து, வர்த்தகம், தொழில், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புகள் குறித்து பேசவுள்ளார். நாளை, அவர் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருநாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?