#BREAKING: சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!
சென்னையில் வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளது நவம்பர் மாத துவக்கத்தில் வணிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாதத்தின் முதல் நாளில் வழக்கம் போல் எரிவாயு விலைகளில் திருத்தம் செய்துள்ளன.

இதன்படி, இன்று (நவம்பர் 1) வெளியிடப்பட்ட அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. (LPG) சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50 என்ற நிலை தொடர்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
