BREAKING: நவம்பர் மாதம் வரை ரேஷனில் பொருட்கள் இலவசம்! பிரதமர் அறிவிப்பு!

 
BREAKING: நவம்பர் மாதம் வரை ரேஷனில் பொருட்கள் இலவசம்! பிரதமர் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார். இதன் மூலம் நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு உணவு பொருட்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக கூறினார்.
தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில், விரைவில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும் என்றும், அதனால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் சூழல் உருவாகும் என கூறியுள்ளார்.

BREAKING: நவம்பர் மாதம் வரை ரேஷனில் பொருட்கள் இலவசம்! பிரதமர் அறிவிப்பு!

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம் என பிரதமர் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்றும், இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்பு உற்பத்தியில் 50% மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 75% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் இனி தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவை இல்லை என்று பிரதமர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

BREAKING: நவம்பர் மாதம் வரை ரேஷனில் பொருட்கள் இலவசம்! பிரதமர் அறிவிப்பு!

மேலும் தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார். இதன் மூலம் நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு உணவு பொருட்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web