தண்ணீரில் மூழ்கிய பாலம் ! கிராம மக்கள் கடும் அவதி!

 
தண்ணீரில் மூழ்கிய பாலம் ! கிராம மக்கள் கடும் அவதி!


கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி இருக்கிறது. இதன் வழியாகதான் ஆலூர், உளியூர், காந்தையூர், மொக்கைமேடு ஆகிய 4 கிராமங்களுக்கு சென்று வர வேண்டும்.
இந்த வழியில் காந்தையாறு நடுவில் உள்ளது. இதனை கடக்க பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் 93 அடியை தாண்டும்போது இந்த சாலையின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கும். 95 அடியை தாண்டிவிட்டால் பாலம் தண்ணீருக்குள் மூழ்கி விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

தண்ணீரில் மூழ்கிய பாலம் ! கிராம மக்கள் கடும் அவதி!

வட மாநிலங்களில் தற்போது பெய்துவரும் கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அந்த அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் அதிகரித்துள்ளது. இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தையூர் பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. காந்தையாறு பாலத்தின் மேல்பகுதியில் 4 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு கிராமங்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. அக்கிராமங்களுக்கு சென்று வர கிராமத்தில் உள்ளவர்கள் சென்று வரவும் பரிசல் பயணம் தொடங்கி உள்ளது


ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரிசலில் செல்லும்போது காந்தையாறை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ஆற்றின் ஆழம் சுமார் 25 அடி இருக்கலாம். இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வருடந்தோறும் பவானிசாகர் அணை நீர்மட்டம் உயரும்போது பாலம் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கையாகி வருகிறது. எனவே இந்த பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீரில் மூழ்கிய பாலம் ! கிராம மக்கள் கடும் அவதி!


மேலும் லிங்காபுரம் சோதனைச் சாவடி அருகே மாற்று வழி இருந்த போதிலும் அப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 6 மாத காலம் இந்தப் பாலம் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் 4 கிராம மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விளைந்துள்ள காய்கறிகளை மூட்டைகட்டி பரிசலில் வைத்து ஏற்றி விவசாயிகள் கொண்டு வரவேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தின் குறுக்கே உயர்மட்ட அளவுக்கு பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web