சொத்தில் பங்கு கேட்டதற்காக தம்பி அடித்துக் கொலை.. அண்ணன் வெறிச்செயல்!

 
ஏழுமலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மகன்களுக்கு குடும்ப சொத்துமீது கவனம் இருந்துள்ளது. இந்த நிலையில் சொத்தை பிரித்து கொடுப்பதற்குமுன் ஏழுமலை கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் சொத்துக்களை மூத்த மகன் கமலக்கண்ணன் பராமரித்து வந்தார். இதில் இளைய மகனான இளையராஜா அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டுவதற்கு கூடுதலாக கடன் வாங்கியுள்ளார். இதனால் இளையராஜாவுக்கு கடன் தொல்லை அதிகமானதால் அதனை சரிசெய்ய திட்டம்போட்டார்.

ஏழுமலை

இதற்காக, தனது மூத்த அண்ணன் கமலக்கண்ணனிடம், குடும்ப சொத்தில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்த தர சொல்லி தினமும் கேட்டுவந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் தனக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தர சொல்லி அண்ணனிடம் மீண்டும் கேட்டுள்ளார்.

அப்போது தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த அண்ணன் கமலக்கண்ணன் தம்பி இளையராஜாவை கால்களால் எட்டி மிதித்தும்  சரமாரியாக அடித்து தாக்கியும் உள்ளார். இதனால் படுகாயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

ஏழுமலை

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இளையராஜாவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அண்ணன் கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web