’என்னைக் கொல்ல முயன்ற தம்பி சீமான்’.. பெரியாரை எதிர்ப்பது மிகுந்த மகிழ்ச்சி.. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பதிவு!

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை விவகாரத்தில் தன்னைக் கொல்ல முயன்ற தனது சகோதரர் சீமான், இன்று அதே பெரியாருக்கு எதிராகப் பேசுவது மகிழ்ச்சியளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஸ்ரீரங்க ஈவேரா சிலையை அகற்றியபோது என்னை கொல்ல வேண்டும் என சூளுரைத்து தேடிய தம்பி சீமான் இன்று
— Arjun Sampath (@imkarjunsampath) January 13, 2025
தீவிரமாக ஈவேராவை எதிர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
தேடி, வாசித்து தூயவர் சாயத்தை ஊடுருவி ஈவேராவின் மெய் நிறத்தை கண்டுகொண்ட தம்பி
உண்மை என்றால் தன் நிலையை மாற்றிக் கொள்வது தவறில்லை…
ஸ்ரீரங்க ஈவேரா சிலையை அகற்றியபோது என்னை கொல்ல வேண்டும் என சூளுரைத்து தேடிய தம்பி சீமான் இன்று தீவிரமாக ஈவேராவை எதிர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேடி, வாசித்து தூயவர் சாயத்தை ஊடுருவி ஈவேராவின் மெய் நிறத்தை கண்டுகொண்ட தம்பி உண்மை என்றால் தன் நிலையை மாற்றிக் கொள்வது தவறில்லை என்பது சத்தியமென்றால் மாட்டிறைச்சி ஏன் தமிழர்களுக்கு எதிரானது என்று தேடி வாசிக்க வேண்டும்.
அப்பா பாட்ஷா கோவை மக்களுக்கு செய்த பச்சை துரோகத்தை அவர் சமூக முட்டுகளை தாண்டி அலச வேண்டும் தமிழகத்திற்கு மராத்தா, சௌராஷ்ட்ரா, நாயக்கர், நாயுடு இன மக்கள் புரிந்த தொண்டுகளை தேடி வாசிக்க வேண்டும். மேற்கண்ட விஷயங்களில் உண்மைகளை கடந்து மீண்டும் அதே நிலையில் நின்றால்... தம்பியும் ஒரு சராசரி அரசியல்வாதியே.. என்று பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!