பீகார், டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் ... டி.ஆர்.பாலு !

 
டி ஆர் பாலு

இன்று பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை  2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய  பட்ஜெட் 2025-2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். பட்ஜெட்டை புறக்கணித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா பட்ஜெட்

 வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய வருமான வரிமுறையில் ரூ 12 லட்சம்  வரை உள்ள வருமானத்திற்கு வரியில்லை.
இந்நிலையில், பீகார் மற்றும் டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார்.

பட்ஜெட்

மத்திய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை மத்திய  அரசு வாரி வழங்கியுள்ளது. டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web