இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்... இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்!

 
பட்ஜெட்
இன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, முதல் பகுதி கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி  தொடங்குகிறது.

கட்சி கூட்டம்

இதனைத் தொடர்ந்து நாளை பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிஅமைச்சர்   நிர்மலா சீதாராமன் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பிப்ரவரி 13ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 2வது பகுதி கூட்டத் தொடர் மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடையும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3ம் தேதி, 4ம் தேதி மற்றும் 6ம் தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார்.  

நிர்மலா பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web